4ஆம் ஆண்டுவிழா பாடல் போட்டி - 1 பாடல் : காற்றின் மொழி



தலைப்பு-வாழ்வின் தேடல்
*************************************
பல்லவி:

வாழ்வின் கனி சுவையா சுமையா
மீனின் வழி கடலா திடலா
மடலின் வரி சிலையா வலையா
தேடல் இனி மதியா விதியா

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

சரணம் 1:

தோற்று கோரும் தூது விதிகள் மதியாது
கூடல் கூசும் மாது வழிகள் அறியாது
தாயின் வீட்டைக்காண தவமும் கிடையாது
பெண்கள் தேடும் வாழ்க்கை பயமும் நுகராது
மனதிற்பதியும் மாமனுக்கு பருவம் மீட்ட விடியாது
தேடல் கூடும் வலியெல்லாம் சொற்பப் பாட்டில் விளங்காது

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

சரணம் 2:

தென்றல் தீண்டும்போது தீயும் அணையாது
திங்கள் நீந்தும்போது வலியும் உணராது
உரித்த வாழைத் தோலால்
தண்ணீர் தெளிவாகும்
பெண்மை கீதை நூலால்
வானம் விழியாகும்
வாழத் தெரிந்த மனிதனுக்கு வாக்குவாதம் ஆகாது
சோகம் நீழும் ஆயுளுக்கு சொர்க்கம் கூட வடிவேது

தமக்கையின் தொனிகள் தெரிந்துவிடில்
தம்பியின் பணிகள் வேறுயில்லை
உதயத்தின் உளிகள் மழுங்கிவிடில்
புனிதர்க்கு தொழிலே சேவையெல்லை

வாழ்வின் கனி…

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
23.08.2019

0 comments:

Post a Comment