விடியலும் இருண்டதோ


விடியலும் இருண்டதோ
விந்தைகளும் நிகழ்ந்ததோ

வெளிச்சங்கள் காரிருளாய்
விம்மி விம்மி அழுததோ
நல்சிந்தனை யாவரும் பெற்று
நலமுடனே யாவையும் கற்று
ஞாலம் மிளிரும் நிலை பிறந்தால்
நாமும் நாடும் சிறக்குமன்றோ
உதிரத்தை பாலாய் தந்து
உதித்த மனிதம் தாய்தானே
அன்பு எனும் அடையாளம்தனை
அகிலத்தில் விதைத்தவளும்
மாதாவன்றோ
இத்தனையும் பறைசாற்றி நீயோ
இம்மையில் பிறந்த பெண்குலமே
ஒருபிடி சோற்றுக்காய் உன்னை மறந்து
உதித்த சிசுக்களை மாய்த்தாய் ஏனோ
விடியலாய் விடிந்த தாய்க்குல ஒளி
வீழ்ந்துப்போனதே உன் அறிவிலியாலே
கயவர்கள் காட்டிய காட்டுமிராண்டி செயலை
கணப்பொழுதில் நீயும் செய்தாயடி
இனியும் இருட்டை தூக்கியெறிவோம்
எதிர்கால வாழ்வை ஒளிரச்செய்வோம்

0 comments:

Post a Comment