கார்குழல்


விண்ணுலக தேவதைகள் விரைந்து வந்து

பூலோகத்தில் பூச்சூடிய பூங்கோதைகளாகினர்
கார்குழலுக்குள் தஞ்சம் புகுந்த கனகாம்பரம்
காலாகாலம் வாசணை தராதென்பது நிரந்தரம்

மலரை சூடியதால் உன் கூந்தலுக்கு மணமா-இல்லை
பலரை கவர்வதே மலரின் மகத்துவ குணமா
இயற்கையிலுள்ள மலர்களை சூடுவதால்
இளவரசிகளின் மேனிக்குள்ளே இன்பம் பெருகும்

படைக்கப்பட்ட மலர்கள் அத்தனையும்
பாவையின் கூந்தலுக்கு அடிமையே
நுதலிலே இட்ட திலகம் சந்திரனை
வசியமாய் வளைத்திழுத்து கார்கூந்தலிலே
சிறை வைத்ததேனோ

உன் அழகிய கார்குழல் அவ்வப்போது
கலைந்து ஆடவர் வதனத்திலே
அட்டாகாசம் செய்கிறதே

மேகத்தை கேட்டு தூதனுப்பிய காற்று

மென்மையாய் துயிலுறங்க
மெல்லிய
வஞ்சிக்கொடியின் கூந்தலிலே 
துள்ளி விளையாடென்றது கார்மேகம்

0 comments:

Post a Comment