நதியுடன்.........


உன்னழகை நான் காண - என்
உள்ளத்திலே காதல் மலர
சித்தியின் கல்யாணத்தன்று-நாம்
துள்ளிவிளையாடியதை சுகமாக
ரசித்ததடி நதியென்ற ரதிதேவி
சாயம் பூசா உன் செவ்வாயும்
சந்திரவட்டமான என்னிதழும்
சரிசமமாய் சல்லாபித்தடி
கட்டழகான உன்மேனி
காந்தமாய் எனையிழுத்து
மாராப்புக்குள்ளே பூட்டி
சிறைவைத்து கொண்டதடி
பார்க்கும் பொருள் அனைத்திலுமே
தெரிந்த சிலை நீதானே
பாய்ந்து வந்த நதிகூட நாமும்
பரவசமாய் ஊர்வலம் போனோமடி
முத்தமழை யாம்பொழிய
அழகிய நதியார் நாதமிசைக்க
நதியும் நாமும் ஒன்றாய் சேர்ந்து
காதலெனும் கடலுக்குள்ளே கலந்து
கல்யாணம் செய்தோமடி
களிப்பாய் நிதம் வாழ்ந்தோமடி-தினம்
அன்பால் இணைந்து வாழ்ந்தோமடி
நல்லுறவால் உலகை வென்றோமடி

0 comments:

Post a Comment