#ஹைக்கூ

#ஹைக்கூ _ஒரு சின்ன அறிமுகம்..
ஹைக்கூ பலரையும் கவரும் எளிய கவிதை வடிவம்.
மூன்று வரிகளில் பல விசயங்களை பல கோணங்களில் வெளிபடுத்தி நகரும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ.
மூன்று வரிகளில் முதலிரண்டு வரிகள் ஒரு கூறு..ஈற்றடி ஒரு கூறு..கவிஞன் முதலிரண்டு வரிகளில் ஒரு கருத்தினைக் கூற வந்து...வாசகன் எதிர்பாராத ஒரு ஈற்றடியினைத் தந்து கவிதையை நிறைவு செய்தால்( இவ்விடத்தில் முதலிரண்டு வரிக்கான கருத்து சிதைந்து புது கருத்தும் கவிதையில் மலர்ந்து விடும்)

அது ஹைக்கூ.
சமீபத்தில் 1.11.2018 அன்று நடந்த ஹைக்கூப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு ஹைக்கூ..
அழகான சிலை
அலைமோதிக் கொண்டிருக்கிறது
இங்கு முதல்வரி ..அழகான சிலை என வருகிறது..அந்த சிலை எதுவாகிலும் இருக்கலாம்..அழகிய பெண்ணுடையதாகவோ..விலங்கு..பறவை..கடவுள் என எந்த ரூபத்தை தாங்கியும் அந்த சிலை இருக்கலாம்..
இரண்டாவது வரி...அலைமோதிக் கொண்டிருக்கிறது ..என்றவுடன் படிக்கும் வாசகனுக்கு..ஓ..கடலில் நிறுவப்பட்ட சிலையாக இருக்கும்..அதனால் தான் அலைமோதிக் கொண்டிருக்கிறது என எண்ணத் துவங்குவான்..ஆனால்..
கவிஞரோ..ஈற்றடியில்..
திருடியவனின் மனது..! என முடிக்கிறார்.
ஆக..அலைமோதிக் கொண்டிருப்பது..திருடனின் மனதாகி..வாசகனின் முந்தைய எண்ணத்தை தவிடுபொடியாக்கி விடுகிறது..ஆம் நண்பர்களே..ஹைக்கூ இத்தகைய மாயாஜாலம் செய்து மனதை மயக்கும் ஒரு கவி வடிவம்..இதனை சற்றே உள்வாங்கி நீங்கள் எழுதத் துவங்கினால்..ஹைக்கூவும் எளிதாய் வரும்.
இந்த கவிதையின் சொந்தக் காரர்..காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா..அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்..
அழகான சிலை
அலைமோதிக் கொண்டிருக்கிறது
திருடியவனின் மனது..!
_ காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா.
#அனுராஜ்..

0 comments:

Post a Comment