தந்தை போலாகுமா
அன்னை பிறந்த ஊரை நோக்கி
அப்பாவும் நானும் அழகாய் உடுத்தி
வீதியோரம் வந்து நின்றபோது
வேகமாய் வண்டியும் சென்றிடவே
கால்கடுக்க காத்திருக்க
காரிருளும் பகலை மறைக்க
என்ன செய்வோம் மகனென்று
ஏக்கத்துடன் கேட்டார் அப்பா
தாத்தா ஆச்சி பார்க்க வேணும்-
பிடிவாதம் பிடித்து நின்றேன் நானே
நடந்து போவோம் வா மகனே
தைரிய வார்த்தை மொழிந்தார் சிவனே
நான்கு மைல் சென்றதுமே
நானோ சோர்வில் துவண்டதுமே
காவல்நிலைய வாகணமொன்று
எங்களை கண்டு நின்றதன்று
எங்கே போகிறீர் என்று கேட்க
இன்னதென்று தந்தை இயம்ப
ஏற்றி இறக்கி சென்றார் -அந்த
இரக்கமுள்ள மனிதனன்று
செல்ல கதைகள் கதைத்து கொண்டு
சீக்கிரமாய் சென்றடைந்தோம் வீடு
தனயனது சுவையை உணர்ந்த -என்
தந்தை போலாகுமா இவ்வுலகில்-
ஆயுள்வரை நான் மறவேன் அறிவுக்கடல் நீங்கள் தானே
ஓரவிழிப்பார்வையிலே
உள்ளத்து மெய் காதல்தனை
உன் கயல்விழிகள் சொல்லுதிங்கே
செவ்விதழும் சிறப்பாய் இருக்கு
செந்தேனும் கூடவே அதிலிருக்கு
காந்தவிழி சைகை காட்டியிருக்கு
கச்சுதமாய் காதல் மலர்ந்திருக்கு
வண்டுகள் மொய்த்து போகுமுன்னே
அள்ளி காதல்தேனை பருகுடா என்றாள்
இத்தனை சக்தியுமிங்கே எதிலிருக்கு
அத்தனையும் கண்டேனடி ஓரவிழிப்பார்வையிலே
உன் கயல்விழிகள் சொல்லுதிங்கே
செவ்விதழும் சிறப்பாய் இருக்கு
செந்தேனும் கூடவே அதிலிருக்கு
காந்தவிழி சைகை காட்டியிருக்கு
கச்சுதமாய் காதல் மலர்ந்திருக்கு
வண்டுகள் மொய்த்து போகுமுன்னே
அள்ளி காதல்தேனை பருகுடா என்றாள்
இத்தனை சக்தியுமிங்கே எதிலிருக்கு
அத்தனையும் கண்டேனடி ஓரவிழிப்பார்வையிலே
குழந்தைப் பருவம்
தத்தி தத்தி அடியெடுத்து
தாண்டி தாண்டி நடைபயில
தாத்தா செய்த நடைவண்டி
தோதாய் வழி சமைத்த வண்டி
அமாவாசை தின நிசியன்று
அசந்து போய் தானமர்ந்து
அம்மாவூட்டிய சாதம்தனை
அறவே உண்ண முடியாதென
அடம்பிடித்த குறும்பு காலமது
கதைகள் பல நிதம் கேட்டு கேட்டு
பலாசுளைகள்போல இனிமை பெற்று
நிதமும் கதைகள் பல கேட்கவென்று
ஆச்சியின் பக்கம் மெல்ல சென்று
அடிமனதில் பசுமரத்தாணியாய்
பதிந்த பருவமது
வறுமையின் கொடுமை வந்து
வெதும்பியை தமக்கை வகுந்தபோது
சமபங்கு கிடைக்கலனு
சண்டைபிடித்த காலமது
விசுகோத்து சுவையும்
வெந்நீரில் கலக்கி தந்த
பால்மாவின் இனிமையும்
ஒன்னாய் தொட்டு உறிஞ்சு
உண்ட உன்னதமான காலமது
எத்தனை காலம் பிறந்தாலும்
இன்ப நினைவுகள் மலர்ந்தாலும்-இனி
குழந்தை பருவம் வந்திடுமா-இது
இலந்தைப்பழம்போல் இனித்திடுமா
தாண்டி தாண்டி நடைபயில
தாத்தா செய்த நடைவண்டி
தோதாய் வழி சமைத்த வண்டி
அமாவாசை தின நிசியன்று
அசந்து போய் தானமர்ந்து
அம்மாவூட்டிய சாதம்தனை
அறவே உண்ண முடியாதென
அடம்பிடித்த குறும்பு காலமது
கதைகள் பல நிதம் கேட்டு கேட்டு
பலாசுளைகள்போல இனிமை பெற்று
நிதமும் கதைகள் பல கேட்கவென்று
ஆச்சியின் பக்கம் மெல்ல சென்று
அடிமனதில் பசுமரத்தாணியாய்
பதிந்த பருவமது
வறுமையின் கொடுமை வந்து
வெதும்பியை தமக்கை வகுந்தபோது
சமபங்கு கிடைக்கலனு
சண்டைபிடித்த காலமது
விசுகோத்து சுவையும்
வெந்நீரில் கலக்கி தந்த
பால்மாவின் இனிமையும்
ஒன்னாய் தொட்டு உறிஞ்சு
உண்ட உன்னதமான காலமது
எத்தனை காலம் பிறந்தாலும்
இன்ப நினைவுகள் மலர்ந்தாலும்-இனி
குழந்தை பருவம் வந்திடுமா-இது
இலந்தைப்பழம்போல் இனித்திடுமா
உணர்வுகளான உண்மைகள்
நீ காயப்படுத்தி
சென்ற என் மனசுக்கு
உன் நினைவுகள் எனும்
மருந்தை போட்டும்
ஆறவில்லை-காரணம்
நினைவோடு கலந்து
ஆடம்பரம் எனும்
விசக்காற்று வந்து
வேதனையை
அதிகரிக்கிறது
இலைமறை தவறுகள் நியாமாக்கப்பட்டால்
பள்ளி செல்லும்
பருவத்திலே பலரது
பொருட் திருடிய
புதல்வர்களை தட்டிகேட்காது
கட்டி அரவணைத்த
அன்பு பெற்றோரினால்
இலைமறை தவறுகள்
நியாமாக்கப்பட்டால்
படாதபாடு பட்டு
உழைத்து பெற்ற
பணத்தை
பயணச்சீட்டு
வழங்குனர் பலனடைந்து
மீதிகாசு கேட்டால்
மாசுக்காரனென்று சொதைப்பது
உரியவரினால்
இலைமறை தவறுகள்
நியாமாக்கப்பட்டால்
சோமபானம் நிதம்
அருந்தி குடும்பசுமைதனை
மறந்து
வீதியெங்கும் வியாக்கியானம்
பாடும் வீரர்களின்
விபரீத விளையாட்டுகளை
கண்டு காவற்துரையினரால்
இலைமறை தவறுகள்
நியாமாக்கப்பட்டால்
தரக்குறைந்த சாமானை
தந்து தனவாளன்
வாழும்
இத்தரணியிலே இலத்திரனிய
துலாபாரம் என்ன
செய்யும் பைகளின்
நிரை புறக்கணித்து
பத்து பைசா
இலாபமடைகின்ற
இலைமறை தவறுகள்
நியாமாக்கப்பட்டால்
வாழ்வாதார செலவுகள்
வரையரையற்று வாழுகின்ற
இக்காலத்திலே உரிமையை
கேட்டு உதாசீனப்படுத்தும்
நிலைமாறி உன்னத
காலம் உதித்து
ஞாலம்
போற்ற நலமுடன்
வாழ்ந்திடட்டுமே
கார்குழல்

விண்ணுலக தேவதைகள் விரைந்து வந்து
பூலோகத்தில் பூச்சூடிய பூங்கோதைகளாகினர்
கார்குழலுக்குள் தஞ்சம் புகுந்த கனகாம்பரம்
காலாகாலம் வாசணை தராதென்பது நிரந்தரம்
மலரை சூடியதால் உன் கூந்தலுக்கு மணமா-இல்லை
பலரை கவர்வதே மலரின் மகத்துவ குணமா
இயற்கையிலுள்ள மலர்களை சூடுவதால்
இளவரசிகளின் மேனிக்குள்ளே இன்பம் பெருகும்
படைக்கப்பட்ட மலர்கள் அத்தனையும்
பாவையின் கூந்தலுக்கு அடிமையே
நுதலிலே இட்ட திலகம் சந்திரனை
வசியமாய் வளைத்திழுத்து கார்கூந்தலிலே
சிறை வைத்ததேனோ
உன் அழகிய கார்குழல் அவ்வப்போது
கலைந்து ஆடவர் வதனத்திலே
அட்டாகாசம் செய்கிறதே
மேகத்தை கேட்டு தூதனுப்பிய காற்று
மென்மையாய் துயிலுறங்க
மெல்லிய வஞ்சிக்கொடியின் கூந்தலிலே
துள்ளி விளையாடென்றது கார்மேகம்
Subscribe to:
Posts (Atom)