நிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்

 அப்பாவையும் அம்மாவையும்
அழகான  தம்பதிகளாய்
பார்த்து ரசிக்க ஆசை
அம்மாவின் அடிவயிற்றிலே 
அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை
உதைக்கும் போதெல்லாம் உரிமையோடு
தடவிவிடும் தருனத்தை பார்க்க ஆசை
கருவரை எனும் கற்பகத்தேரில்
விறுவிறுவென்று ஊஞ்சலாடிட ஆசை
தொப்புல் எனும் கொடியினூடே
தொடர்ந்து உண்டியுண்ண ஆசை
ஐரெண்டு மாதம் சுமந்த
அழகிய  சிம்மாசனம் 
பார்க்க  ஆசை
பிரசவ வலியை தாங்கி -என்னை 
பிரசவித்த பெருந்தியாகத்தை 
பார்க்க ஆசை 
பிறந்தபோது அகமகிழ்ந்து 
வாரியணைத்து முத்தமிட்ட
வதனத்தை பார்க்க ஆசை
அவ்வப்போது வந்து போகும் 
அடைத்த மூக்கு சளியோடு
தடிமல் எனும் பிணியை பார்க்க ஆசை
ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்று 
காத்திருந்து காலில்போட்டு 
தாலாட்டியதை பார்க்க ஆசை
சிரங்கு எனும் கொடிய நோய் 
சித்தரவதை செய்தபோது  மூலிகை 
போட்ட முதல் நாளை பார்க்க ஆசை
வறுமையின் கொடுமை 
சிறுமையில் வாட்டியபோது 
விசுக்கோத்தை தந்த
அப்பாவை  பார்க்க ஆசை
கல்வியை புகட்டுவதில் கரிசணையாய்
களமிரக்கிய காலத்தை பார்க்க ஆசை
ஆண்டி மகன் நல்ல பொடியனென
அனைவரும்  வாழ்த்திய 
வசந்த காலத்தை பார்க்கஆசை 
ஆடிவிழா காலங்களிலே அடிக்கடி 
யொலிக்கும் மணியோசை கேட்க ஆசை
குளப்படி செய்து கோடிபக்கம் நிற்கையிலே
வளக்கப்படி வந்து  வாரிலே அடித்தபோது
வாள்வாள்னு கத்திய காலத்தை பார்க்க ஆசை
திறமையாய் விளையாடும்போது
கைகளை தட்டிய எம்
கலைஞர்களை பார்க்க ஆசை
களிப்படைய கைகுழுக்கி  பரிசு 
தந்த பாக்கியவான்களை பார்க்க ஆசை
அரச்சுனன் தவம்  என்ற நாடகத்திலே
ஆர்வத்துடன் நடித்து போன
அழகிய நாளை பார்க்க ஆசை
சங்கீத நாற்காலி போட்டியிலே
சங்கமித்து  வெற்றி கனியை 
சுவைத்ததை பார்க்க ஆசை
அறிவிப்புக்கு அடித்தளமிட்டு கலக்கிய
அற்புத மேடையை பார்க்க ஆசை
கனகு கனகு என அடிக்கடி  முனுங்கும் 
சகபாடிகளை சளிக்காமல் பார்க்க ஆசை
எத்தனையோ நிஜமான நினைவுகளை 
நிச்சயமாய் பார்க்க ஆசை 
 நினைவுகளை சுமக்கதானே-தவிர
 இவையாவும்
 நிரைவேறா நிதர்சனமான ஆசைகள்

  

0 comments:

Post a Comment