ஹைக்கூ

துளிர்விட்ட கிளையில்/
புத்தம் புதிதாய் முளைக்கும்/
பறவைகளின் காதல்/

அந்தாதி

துள்ளி விளையாடும் செல்ல தேவதையே/
தேவதையே குடும்ப
சீதேவி மொட்டே/
மொட்டே மலர்வாய்
முழுநிலவு ஒளியே/
ஒளியே கற்பின்
உண்மை அணிச்சையே/
அணிச்சையே வாடா
அழகு செல்லமே/
செல்லமே சீதனக்
கல்வி மழையே/
மழையே பொழிந்து
மகிழ்வே தருமே/
தருமே நிதமே
தங்கமாய் மிளிருமே/

லிமரைக்கூ

பாலைவனத்தில் மணல் பரப்பு/
நவீன உலகில் அரேபிய மன்னர்கள்/
கட்டிடம் கட்டியதால் மதிப்பு



தன்முனை


மௌனம் ஆழமான 
சிந்தனையின் தோற்றமாகும்/
அமைதியாக கடந்து செல்ல
வெற்றிக்கான தனித்துவ மாற்றமாகும்/

லிமரைக்கூ


அன்னை

அன்னையின் கற்பித்தலில்
அகிலத்தை வென்றிடுவோமே
****************************************
அன்பை பாலாக்கி அகரத்தை ஊட்டியவளே//
ஆசானை தான்மாறி ஆற்றுப்படுத்திய மாதாவே//
தமிழ்ப்பாட புத்தகத்தை மனப்பாடம் செய்யச்சொல்லி//
மாலைப்பொழுது ஆனதுமே தடியோடு நின்றவளே//
கண்டிப்போடு கற்பித்து கல்வியிலே உயர்த்தினாயே//
நீ சொல்லித் தந்த சொற்களெல்லாம்//
சுருக்குப்பை சல்லி சத்தமாகி//
இப்போதும் மனதினிலே இனிப்பாக கேட்கிறதே//
முத்தமிழின் சுவாசத்தை முதன்முதலாய் கருவறையில் //
தாய்மொழியின் உன்னதத்தை தனயனுக்கு அளித்தாயே//
அம்மா உந்தன் கலை அகத்தாலே//
அகிலம் போற்றும் மானுடன் ஆனேன்//



தன்முனை -அன்பு

தூய அன்பினால்/
வாழ்வோ செழிப்பாகும்/
போலி பாசத்தால்/
பிரிவோ குடிகொள்ளும்/