ஆவியில் கலந்த நாவினிக்கும் செந்தமிழே

செந்நீரில் கலந்திட்ட செந்தமிழ் ஓடையே//
நாவினில் நீந்தியே நற்சுவையும் அளித்தாயே//
மூச்சியிலும் பேச்சியிலும் முத்தமிழ் வடிவமாய்//
மூவுலக படைப்பிலும் முன்னிலை பிரவாகமாய்//
காசினியில் வலம் வரும் கன்னலே//
தமிழென்ற நெடுங்கணக்கில் தனித்துவமாய் மலர்ந்தாயே//
தாய்மொழியும் சேய்மொழியும் நாவினிலே உலாவிடவே//
தமிழனின் மரபணுவில் தனியாக உதித்தாயே//
உலகமொழி பிறந்திடவே உயிர்மெய்யாய் நீயாகி//
செந்தமிழில் நாவினிக்க
செயலாற்றிய தாயானாய்//
உன்புகழை நாம்பாட
உச்சரிக்கும் போதெல்லாம்//
மெய்மறந்து மேகநாதன்
வான்மழையும் பொழிந்திடுவான்//



0 comments:

Post a Comment