புரட்சிக்கவிதை-குருதி படிந்த மண்


செந்தமிழ் ஊரின் செம்மை சென்னியே/
செறிந்து தமிழூரும் யாழ்நதியே/
அதிகாரம் கொண்டு அடையாளம் கேட்டதுமே/
ஆக்கிரமித்து அழிக்க நினைத்த பாவியே/

மண்ணின் மகிமை புரியாத மானிடனே/
மாங்கனி சுவைத் தெரியாத சாதியே/
குண்டு மழைப் பொழிந்த உன்னால்/
குருதி படிந்த மண்ணாய் மாறியதே/

உரிமையை கேட்பது உனக்கு கோபமா/
உடல்களை அழிப்பது பகைமை சாபமா/
உதிரம் காட்டாறாய் மாறிய இடமா/
உண்மை வெல்லும் ஒருநாள் வேகமா/

எங்கள் எண்ணம் தங்க மகுடம்/
சங்காய் முழங்கும் சத்திய சபதம்/
குருதிப் புனல் கொட்டிய இடம்/
பசுமையாய் மாறும் எங்களின் தாகம்/



0 comments:

Post a Comment