கருணை பொங்கும் உள்ளம் தா


கண்ணில் காணும் காட்சிகள் பல/
கருவில் பதியும் மாட்சிகள் சில/
மண்ணில் வாழும் மானிடர்க்கிடையில்/
சொல்லில் படரும் சுயமும் தனியே/

அன்பின் வடிவில் ஆயிரம் உருவம்/
அன்னை மடியினில் யாவரும் தேடும்/
கருணை பொங்கும் உள்ளம் தாவென/
கதறி அழுதிடும் கலியுக காலமே/


உணவை வீணே குப்பையில் போட/
உலகம் தானே தொப்பையில் நீள/
நொந்து வாழும் யாசகன் கையில்/
சொந்த பணத்தில் சாதம் கொடு/


மனமும் குணமும் மாற வேண்டும்/
மகிழ்வாய் நிதமும் வாழத் தோன்றும்/
கருணை கொண்ட உள்ளம் தந்தால்/
கயவனும் வாழ்வில் திருந்தக் கூடும்/


இனிய வார்த்தை மலரும் நேரம்/
இன்ப விதையும் துளிரும் நாளும்/
இருகிய இதயம் கருணைப் பாடும்/
இறைவன் இதமாய் தாண்டவம் ஆடும்/


நல்லதை நினைக்க நாமகள் வருவாள்/
நம்மவர் திகைக்க நல்லருள் புரிவாள்/
கருணை பொங்கிட உள்ளமும் தருவாள்/
காசினி எங்கும் அன்பையே பொழிவாள்/

0 comments:

Post a Comment