ஹைக்கூ


சுவர்க்கடிகாரம்/
நேரத்தை சொல்கிறது/
கூவும் குயில்/

இறந்த உடலை/
சுமந்து செல்கின்றன/
எறும்புகள்/

 

பறித்த தேயிலையில்/
சுருண்ட வண்ணம் இருக்கிறது/
தண்ணீர்க்கொடி/

 

வானவீதி/
அங்குமிங்கும் தெரிகின்றன/
மேக உருவங்கள்/

 
கிளியின் சிறகு/
பச்சையாக இருக்கிறது/
புல்வெளி/

வானவில்/
உடனே மறைந்து விடுகிறது/
பஞ்சவர்ணக்கிளி/


கொத்தும் மைனாவுக்கு/
கூர்மையாக இருக்கிறது/
மாட்டின் கொம்பு/

0 comments:

Post a Comment