விமோசனம் எப்போது


வளர்ந்து வளர்ந்து வானுயர
ஆசைதான்-நீயோ
வயிறு பிழைக்க வந்தவனென்று
கழுத்தை வெட்டிவிடுகிறாய்
கவாத்து எனும் வார்த்தை சொல்லி

விதைகளுக்கு கூட விமோசனம்
தருகிறாள் பூமித்தாய்-நிதம்
விருட்சமாய் மேலெழும்பி
விருப்புடன் வாழ்வதற்கு-நீயோ
அடைக்கலம் தந்ததாய் கூறி
அடிமைகளாய் அச்சுபதித்தாய்

வாழ வழி பல இருந்தபோதும்-
தோள்  கொடுக்க யாருமில்லை
தேடி வந்த வேலைதானே
நாடி போக யாரிருக்கா-
எத்தனை ஜென்மம் தேவையடா-எம்
உரிமைதனை வென்றெடுக்க

எத்தனை ரூபா ஈட்டித்தந்தும்
நித்தமும் நாம் நடைப்பிணமாய்
இயற்கைகூட எம்மையறியும்
தாங்கிக் கொள்ளும் தைரியகாரனென்று
சொல்லி சொல்லி பலனுமில்லை-விரல்களுக்கு
கொழுந்தை கிள்ளி கிள்ளி தைரியமுமில்லை

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு-நாம்
வாகை சூடுவது எப்போ கணக்கு?

1 comments:

Palaniyandy Kanagarajah said...

கவாத்து:தாவரம் நன்றாக வளருவதற்காக கிளை,தழை போன்றவற்றைக் கழித்து ஒழுங்குபடுத்துதல்

கணக்கு: கணக்கப்பிள்ளை என்பவரே கணக்கு எனும் பெயரில் வருகிறார்.தேயிலை மலையில் வேலையாட்களுக்க மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்களுக்கு மூத்தவர் அதாவது தலைமை வெளிக்கள உத்தியோகத்தர்

Post a Comment