ஆடிக்காற்று

ஆடிக்காற்று  வீசுதையா!
ஆள  பிரட்ட   பார்க்குதையா!
தேநீர் தந்த தேயிலையே -இன்று
தேகம் மெலிந்து காயுதையா!
மலையகம் காத்த மாதாவோ -இன்று
மதி மயங்கி நிற்குதையா!
கயவர்களின்  தீய பழக்கத்தால் 
காடே பற்றி எரியுதையா!
நிவாரணம் தரும் நிர்வாகமென்று-மாந்தர்
நிம்மதி முச்சி விடுகிறார்களையா!
ஆடித் திங்களின்  அவலநிலையால்
ஓங்கி  வளருது வாழ்க்கை செலவையா!
ஆடி விழா  தொடங்கியதால்
அதிலே காலம்  கழியுதையா.........!இதிலே
அழகன் முருகனின் அருள் கிடைக்குதையா!

அந்தி நேர வானம்


திங்களின் தியாகம்

நிலவு தேவதையை முற்றுகையிட.....
நீந்திவரும் மேக கூட்டங்களே....
என்னை எத்தனைமுறை சுற்றி வலைத்தாலும்.... 
கதிரவனிடம் கடனாக ஒளியை பெற்று...
காதலர்களுக்காக ஒளியை தருவேன்....
இதுவே எனது சத்தியபிரமானம்
பசறை காவத்தை கனகராஜா

பசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து

கவி வாழ்த்து சொல்ல வந்தேன்!
கவிஞரையா நீலாபாலனுக்கு!
கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ!
கவி கடலில் விளைந்த முத்து நீ!
பதுளை சரஸ்வதியில் பனுவல் வெளியிட்டாய்!
இன்று பசறை மண்ணின் முத்திரையிட்டாய்!
உம்மை ஆலாபிப்பது அற்சரத்தாலா? அல்லது
அழகிய மலர் புச்சரத்தாளா?
பாமாலை பாடிச்செல்வார் பலகோடி இன்று
கவிமாலையில் வாழ்த்த வந்தேன் பலர்கூடி
கடலோரத் தென்னைமரம் தந்த காற்று- இன்றும்
உடலோடு உரசி செல்லுது எம்மை பார்த்து!
மட்டகளப்பில் மலர்ந்த மன்னன் நீ!
மலைகவி வட்டத்தில் விளைந்த மதியுக மைந்தன் நீ!
கவிதைக்கு நான் அன்று கன்றுக்குட்டி!
கவி கற்றுத்தந்த நீரோ எந்தன் செல்லக்குட்டி!
கிழக்கில் உதித்த புதல்வன் நீ!
ஊவாவில் இணைந்த உன்னத மாப்பிள்ளை நீ!
கவண் கொண்டு விரட்டுவார்கள் பறவைகளை!
பணம் கொண்டு திரட்டுவார்கள் உன் பனுவல்களை!
தொலைபேசியில் அழைப்பு தந்தீர் அன்று! – இன்றும்
விலைவாசியாய் உயருது உனது அன்பு!
வாழ்க உனது கவிச்சேவையையா!
வாழ்நாள் முழுக்க எங்களுக்கு தேவையையா!
நீடூடி வாழ்க நீலாபாலனே!
நிதமும் வாழ்த்துகின்றேன் கவியுடனே!
கவிதைக்கு நீர் சக்கரவர்த்தி!
களிப்புடன் வாழ்த்த வந்தேன் கைகள்தட்டி!

எனது ஊர்





காவத்தை ஊரடா!
கற்பக சுரங்கமடா!
வீதியோரம் விழாகோலம்!
பலா மரங்களின் வர்ணஜாலம்!
குழந்தை முதல் முதியோர் வரை
பசிதீர்க்கும் கும்பகோணம்!
அறிவாளர்களை உறுவாக்கிய
அற்புத கலாசாரம்!
மான்புமிகு மனிதர்களின்
மதிக்கதக்க மந்திரஜாலம்!
நான் பிறந்தது காவத்தையா?
அல்லது என்னை பெற்றது காவத்தையா?
கோணக்கலை தேசமடா!
கொண்டாடுவது சிறப்படா!
பிறந்த மண்ணடா பெருமிதம் கொள்ளடா!
மாதாவை போற்றடா! மறுபடியும் பிறந்திடடா!
தோணிகள் இல்லாவிடினும் தோல்விகள் இல்லையடா!
சமுத்திரம் இல்லாவிடினும் சரித்திரம் படைக்குமடா!
முத்திரை பதிக்குமடா முத்தான காவத்தையூரடா!

என் இதயம் சந்தித்த இனிய காதல்

அன்பான ஜெயந்தி!
ஆனால் நீ ஒரு செவ்வந்தி!
நீ எழுதிய மடல்களோ தினதந்தி!
என் மனதில் தினமும் குந்தி!
என்னைப் பற்றி என்னாலும் சிந்தி!

டெங்குவை ஒழிப்போம்

ஆதியில் வந்தது சிரங்கு!
அதிரடியா வந்தது டெங்கு!
அதனால ஊதுராங்க சங்கு!
அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு!
செட்டிபாளயத்தில் குடிக்குராங்க நுங்கு!
சிறட்டையில் உருவாகுது டெங்கு!
பசறையில் வந்தது டெங்கு!
பலருக்கு அடையாளங் கண்டு!
ஒரு கிழமையில் ஒருநாள் நின்று!
உருப்படியா துப்பரவு செய்து கொண்டு!
உயிர்வாழ வேண்டுமென்று வந்து!
உதரி சென்றார்கள் கண்டு!
இனியாவது இடையில் இறக்காமல் இருந்து!
இன்பமயமாக வாழ்வது நன்று………