ஹைக்கூ

அடர்ந்த காட்டில்/
அவ்வப்போது வந்து போகும்/
மயில் அகவும் சத்தம்/




ஹைக்கூ

பனித்துளிகள்/
எங்கும் பரவி கிடக்கிறது/
தேயிலைத்தூள் வாசம்/


தன்முனை கவிதைகள்

நினைவில் வாழ்ந்த
நிதர்சனமான உறவுகள் நீழும்//
கனவில் மட்டும் வந்து
போலியாய் கலைந்து போகும் //


ஹைக்கூ

குளத்தில் குளியல்/
பிரிந்து வழி விடும்/
படர்ந்திருந்த பாசி/




ஹைக்கூ



முளைத்த காளான்/
மீண்டும் எப்போது வருமோ/
அடைமழை/



ஹைக்கூ

புதிய கட்சி
கேட்க சலிக்கவில்லை
பொய் வாக்குறுதி
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
new party
not boring
to hear false promises. 
Trans: Bommidi Mohandoss.