ஹைக்கூ


உழைப்பாளர் சிலை/
ஒதுங்கியே இருக்கிறது/
ஊதிய பேச்சுவார்த்தை/






தன்முனைக்கவிதை

பெய்த மழையால் 
பேரானந்தம் உழவனுக்கு/
அறுவடை நன்நாளில்
செல்வமோ குடும்பத்துக்கு/



ஹைக்கூ

பழைய வானொலி/
இன்னும் அப்படியே இருக்கிறது/
அந்தநாள் ஞாபகம்/



ஹைக்கூ


பசுமை வயல்/
பார்த்ததும் மனதை கவர்கிறது/
சோளக்காட்டு பொம்மை/




குளத்து நீரில்/
பாய்ந்து சத்தம் எழுப்புகிறது/
சிறுவன் எறிந்த கல்/