ஹைக்கூ

ஆலையின் சத்தம்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
மின்சாரக் கட்டணம்

ஹைக்கூ


கண் புருவத்தில்/
நிறைந்து இருக்கிறது/
மூடுபனித் துளிகள்/
குழாய் நீர்
கீழ் நோக்கிப் பாய்கிறது
அமர்ந்திருந்த தவளை

மரண வீடு/
அவ்வப்போது கேட்கிறது/
மூக்கு சிந்தும் சத்தம்/

ஹைக்கூ

மரத்தின் கிளையில்/
தொங்கியப்படியே இருக்கிறது/
காற்றில் சிக்கிய குடை/


ஹைக்கூ

1.தேயிலை பெருந்தோட்ட யாக்கம்/
பெரும் வளர்ச்சியை அடைகிறது/
தேயிலை சிறுதோட்டம்/

2.புத்தக வெளியீடு/
புதிதாக கிடைக்கின்றன/
முகநூல் நட்புகள்/

3.காலை வேளை
கதவை திறக்க வருகிறது
நீம்பல் சத்தம்

ஹைக்கூ

தனது குழந்தைக்கு
தாய் ஊட்டுகிறாள்
கள்ளிப்பால்

ஹைக்கூ

எறும்புப் புற்றில்
பாதுகாப்பாக இருக்கிறது
சேமித்த உணவு

ஹைக்கூ கவிதைகள்

1.வாடிய தேயிலையில்/                            
பரவிக் கிடக்கிறது/
வேலையாட்களின் உழைப்பு/

2.பறக்கும் விமானத்தில்/
   வளைந்து இருக்கிறது
    வானவில்/

3.தொழிற்சாலைப் புகை/
மேலெழுந்து செல்கிறது/
தேயிலை விலை/

4.பறக்கும் விமானத்தில்/
வளைந்து இருக்கிறது/
வானவில்/

5.அம்மா சமையல்/
அருமையாக இருக்கிறது/
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்/

6.காதலர் தினத்தில்/
வாடாமலே இருக்கிறது/
காகிதப்பூ/

7.பரப்பிய தேயிலையில்/
மேலெழுந்து செல்கிறது/
நீராவி/