புதுக்கவிதை விருதுகவி

புதுக்கவிதை
**************
எண்ணத்திலே உதித்த வார்த்தைகளை
இன்புடனே கோர்த்து எடுத்து
யார்த்து பாடும் கவிநடையே
யதார்த்தம் உணர்த்தும் புதுக்கவிதை

பாமரர் முதல் பண்டிதர்வரை
பக்குவமான மொழிநடையில்
வாசித்து நாளும் பயனடையும்
வசந்தகவி இதுவன்றோ

உவமையும் உண்மையும் கோர்த்து
உத்திகளை ஏட்டில் பதித்து
சமூகம் விரும்பும் சந்தக்கவி
அங்கதமாய் ஒலிப்பது இக்கவியே

எதுகையு மோனையும் இதிலிருக்கும்
இனித்திடும் சந்தங்களும் மலர்ந்திருக்கும்
படிமமும் தொன்மமும் கலந்திருக்கும்
சிலேடையும் முரணும் சிறப்பளிக்கும்

இருண்மையும் கூடவே நுழைந்து
எல்லையில்லா நயம்தனை படைத்து
அத்தனையும் சங்கமிக்கும் திடலாய்
அழகிய வெளிப்பாடே புதுக்கவிதை

வாசிப்போருக்கு நன்மை அளித்து
வாஞ்சையுடன் மனதில் பதித்து
மாந்தரெல்லாம் மகிழ்வாய் வாழ
மகிமை அளிப்பது புதுக்கவிதையே

முழுப்பெயர்-பழனியாண்டி கனகராஜா

புனைப்பெயர்-காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

திகதி-07.12.2018

முகவரி-கோணக்கலை தோட்டம்,
காவத்தை பிரிவு,
பசரை.

இது எனது சொந்த படைப்பென்றும் வேறு படைப்புகளின் பிரதியல்லவென்றும் உறுதிமொழி அளிக்கின்றேன்

கையூட்டு


முகமூடிதனை அணிந்து கொண்டு
முழு உலகை ஆக்கிரமிக்கும்
சூசகமான கையூட்டே
சுகத்தை தந்தாய் தனியே புறப்பட்டே

எந்தவொரு வேலை செய்வதற்கும்
இனிமையாக உடனே பிறக்கும்
அந்தரங்கமான அசட்டு செயலை
அனைவரும் இங்கே கையூட்டென்போம்
மாயை நிரம்பிய வாழ்க்கையிலே
நோயை பரப்பிய சடப்பொருளாய்
எங்கும் வியாபிக்கும் விருட்சமே
இதுவே நாளை கிளை பரப்புமே
கல்வி விலையோ அதிகரிக்க
கயவர் கூட்டமோ நித்தம் பிறக்க
பிணியை தீர்க்கா வைத்தியனாய்
தனியே நின்று அழிக்கும் வியாதி
இம்மையில் நீயும் வளர வேண்டாம்
எல்லா நன்மையும் அழிக்க வேண்டாம்
எதிர்கால சந்ததியோ இன்புடன் வாழ
இன்றே மறைந்திடு இழிவான கையூட்டே

தாய்நாடு ************


தாய்நாடு என்றும் எம் தாய்வீடு
மூவின மக்களும் செறிந்து வாழும்
முழங்கும் சங்காய் என்றும் திகழும்
முத்தாய் விளங்குவதே இத்திருநாடு


உரிமையை உடனே கேட்டு பெற்றிட
சுதந்திர குருகாய் எங்கும் பறந்திட
இறைமையை தந்த இதயநாடாம்
இதுவே எமது சொந்த வீடாம்

உலகெங்கும் வாழும் உறவுகளிடையே
பாலமாய் இணைந்து பாசம் பிணைத்திட
குடியுரிமை அனுமதி வழங்கிய நாடாம்
கூட்டுறவால் ஞாலத்தை வென்ற நாடாம்

தொழிலை நித்தம் தூய்மையாய் செய்ய
தொந்தரவின்றி மனையோடு வாழ
நாம் வாழும் நாடே ஈழத்திருநாடு
உரிமை போராட்டம்
உச்ச நிலையை அடைகிறது
பேரினவாத ஆக்கிரமிப்பு

பாடல்: தை பொறந்தா வழி பொறக்கும்

தாய்ப்பாசம்
****************
பல்லவி
சேய் சிரித்தா தாய் மகிழும் சொந்தமே சொந்தம்
அன்பிருந்தா தேன் வடியும் சொந்தமே சொந்தம்…(2)
சேய் சிரித்தா…

சரணம்-1:
கருவினிலே பால் கொடுத்தாய் சொந்தமே சொந்தம்
இடுப்புவலி தான் பொருத்தாய் சொந்தமே சொந்தம்…(கருவினிலே)
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வயிற்றினிலே எனை சுமந்தாய் சொந்தமே சொந்தம்
சேய் சிரித்தா …
சரணம்-2
தந்தையரின் சிந்தையாலே சொந்தமே சொந்தம்
மதிமழையோ பொழியுதமா சொந்தமே சொந்தம்…(தந்தையரின்)
சின்னவனின் திறமையிலே சொந்தமே சொந்தம்
எண்ணமெல்லாம் குளிருமம்மா சொந்தமே சொந்தம்…(சின்னவனின்)
சேய் சிரித்தா…
சரணம்-3
கலைஞனையே ஈன்றெடுத்தாய் சொந்தமே சொந்தம்
காசினியில் புகழ் நுகர்ந்தாய் சொந்தமே சொந்தம்…(கலைஞனையே)
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வாழ்வதற்கே உயிர்கொடுத்தாய் சொந்தமே சொந்தம்…
சேய் சிரித்தா...

#அந்திப்பொழுதும் #அவளின் #நினைவும்

அந்தி சாயும் வேளையிலே/
மரத்தின் நிழல் தொடுகையிலே/
இருவரும் ஒன்றாய் கூடி அமர்ந்து/
இனியசொல் பகிர்ந்தோமடி/

தென்றல் வந்து தொட்டு பார்க்க/
தேவதை நீயோ தோளில் சாய/
எத்தனை சுகம் நம்மில்
மலர்ந்து/
இதயகீதம் மீட்டியதே/
நினைவுகள் என்றும் நிசமானவை/
நீயோ எந்தன் வசமானவள்/
எதிர்கால வாழ்வுதனை/
எதிர்ப்பார்த்த காலமது/
ஊடலும் மோதலும் ஒரு நொடியில்
தோன்றி மறையும்/
உண்மைகாதல் மட்டும்
உன் பெயரை சொல்லித் திரியும்/
கலாட்டா வந்த நேரமெல்லாம்
கண்ணியமாய் நாம் இருந்தோம்/
காலங்கடந்து போனதுமே
துரோகம் செய்தது ஏன் கிளியே/
சாயங்கால நேரத்திலே
தலைசாயும் சூரியனும்/
சத்தியகாதலை
பறைசாற்ற
சாகாவரம் பெற்றது அன்றே/
அந்தகால கால நினைவெல்லாம் /
ஆயுள்வரை தொடரும் கண்ணே/
நல்லெண்ணம் மலர்ந்திடவே/
அந்திமாலையில் பூத்திடு பெண்ணே/

காற்றுவெளி


அனைத்துயிரும் வாழ்ந்திடவே
அத்திவாரமான காற்றலையே
நீயின்றி எவ்வுயிரும்
நிம்மதியாய் வாழாதிங்கே

இதயம் மெல்ல துடித்திடவென்று
இன்னிசை நாதமாய் நீ புகுந்து
சந்தோச வாழ்வில் பயணித்திடவே
சகலருக்கும் வாழ்வு கொடுத்தாய் தாயே
இயந்திர வாகனங்கள் ஏராளம் உருவாக்கி
இயற்கையின் வெளியில் புகைதனை கக்கி
எண்ணற்ற நோய்களை பரப்பும் திட்டம்
இனியும் வேண்டாம் உனது நாட்டம்
நல்ல மரங்களை நாளும் நேசித்து
செல்ல வாரிசுகளாய் கூடி அரவணைத்து
நல்ல காற்றை நாசினில் நுழைத்திடுவோம்
சூழலை காத்து சுகமாகவே வாழ்ந்திடுவோம்