இலாபங்களுக்காய் இம்மண்ணில் வாழும்
பயங்கர விலங்கே பச்சோந்தி மனிதன்/
தேவைகள் முடிந்ததும்
தெருவிலே வீசும் எச்சியிலைப் போல/
கூடவே உறவாடி கொடுமை செய்பவனே
கொடுக்குள்ள விசமனிதன்/
இன்பத்தில் அரவணைத்து
துன்பத்தில் தூக்கியெரிந்து/
மெய்யை பொய்யாய் மாற்றும்
மேகவலையே இம்மனிதன்/
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து
உதாசீன வார்த்தையால் அசிங்கப்படுத்தும்/
ஊனமானவனே இம்மனிதன்/
காலத்தின் தேவையறிந்து
கமுக்கமாக செயற்புரிந்து/
அனைவரும் முன் அலட்சியபடுத்தும்
அரைமனிதனே இம்மனிதன்/
மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல
நேரத்துக்கு நேரம் பேச்சை மாற்றும்
பேதமை தோற்றமே இம்மனிதன்/
நல்லுள்ளம் என நம்பி
நாமும் மதிப்பு வழங்கியபோது/
குரங்கிடம் கிடைத்த மாலைபோல/
குதரிப்போட்ட பாவியடா நீ/
இடங்கள் மாறும் இவ்வுலகில்
குணத்தை மாற்றும் நிறமடா நீ/
இறைவா இனியும் படைக்கும்போது/
இழிவாய் மனிதனை படைத்திடாது/
பண்புள்ள மனிதனை பாரில் படைத்து/
அன்புள்ள குணத்தை அரங்கேற்றி காட்டு/
நிறம் மாறும் மனிதர்கள்
புதுக்கவிதை
நீ இல்லாமல் நானில்லை
அன்பே உன்னை நினைக்காத நாளில்லை!
நினைக்கும்போதே என்னுள் புகுந்தாயடி!
பள்ளிப் பருவத்திலே காதலித்த உன்னை!
பாதியிலே மறந்தானடி மலைக்கவியான்!
காரணங்களும் நானறியேன்
காதல் ரதி தேவதையே!
பல ஆண்டுகளுக்கு பிறகு நீயோ
பாவலனைத் தேடி வந்தபோது!
எத்தனை சுகம் எனக்கென்று
எழுத்தில் சொல்ல முடியாது கண்ணே!
நீ வரும் வரைக்கும் காந்திருந்த
வாய்மைக் காதலன் நானன்றோ!
என்னையும் உன்னையும் இரண்டற கலந்தது
எல்லாமறிந்த ரீங்காரமன்றோ!
பல வடிவுப் பெயரில் வந்து
வசீகரித்த போதும் அன்பே!
உன்னை நானும் மறந்ததில்லை
என்னை யாரும் நெருங்கவில்லை!
அத்தனைப் பேரையும் புறந்தள்ளிவிட்டு
அன்பே அடியேன் உன்னை ரசித்தேனடி!
அவ்வப்போது நீயும் வந்து
அடிமனதை தூண்டும்போது!
காதலிக்கவும் ஆசையடி
கடமையோ என்னை தடுக்குதடி!
ஒரு நாளும் நானுன்னை மறவேனடி!
உத்தமியே நீதான் என்
புதுக்கவிதையடி!
Subscribe to:
Posts (Atom)