ஆதங்கத்தின் அறைகூவல்







அறுவடையை நாள்தோறும் 
அள்ளி தந்தோம்
ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை 
பெற்றுத் தந்தோம்
கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும்
 யாம் கொழுந்தை கிள்ளி கிள்ளி தந்தோம்-நிதம்
கொடுமைபடுத்துவது உனது வேலையா போச்சி?
வந்தவன் வந்தவன் என்று தினம் வசை பாடுகின்றாய்
நீயோ வந்த திசை மறந்து தம் பூர்வீகமென்று
பொய் வேசம் போடுகின்றாய்
வட்டி வட்டியாய் கொட்டிய பணமெல்லாம்
கொழுந்து கூடையில் சுமக்க முடியாதே
அந்நியனின் நோக்க அசுர செயலானது
மூளையை இயங்கவிடாத  திட்டமானது-இதில்
தலை நரம்பு வேரெல்லாம் நசுங்கி போனது-
விட்டு விடாமல் தொடருவது வேடுவகுலம்.-
இதை வேடிக்கை பார்ப்பது மனிதகுலம்
 உரிமையை கேட்டால் ஓடிப்போ என்கிறாய்
வறிய மக்களை வஞ்சித்து வாஞ்சையடைகிறாய்
நாக்கென்ற ஆயுதம் சொல்வது நல்வாக்கு
நயவஞ்சகனாய் செயல்படுவது உனது போக்கு
அடி வயிறு பற்றி எரியுதுங்க
சிறு நொடியேனும் சிந்தித்து பாருங்க
நாங்கள்  நாட்டு பொருளாதாரத்தின் முதுகெழும்பு
நோட்டை தரும்வரை போராடுவது எங்கள் தெம்பு

வாழ்க்கையும் இயற்கையும்





அன்னையின் கர்ப்பபையிலே
சிக்கிய சிறுதுளி சுக்கிலம்
சிறு பிண்டமாய் உருவாகியதே
மூச்சி எனும் ஆதாரம் கொண்டு
சுவாசம் எனும் காற்றுபுகுந்து
துடிக்க ஆரம்பித்த சுவர்க்க
மண்டலமது

பல திங்கள் தான் கடந்து
பதினெட்டு பாடுகளை
அன்னைக்கு தந்து
பாரினிலே உதித்த பிஞ்சி
பாசத்தோடு அரவனைத்த குஞ்சி

பூமிதாய் தாங்கிக் கொண்டாள்
பொறுமைதனை தேங்கி கொண்டாள்
இயற்கையன்னை மகிழ்ச்சி கொண்டு
இன்முகத்துடன் வாரி கொண்டாள்

இன்பமும் துன்பமும் இறைவனின் நியதி
இரவும் பகலும் இயற்கையின் பரிதி
சீற்றம் கொள்வது இயற்கையின் சுபாவம்
சீண்ட வைப்பது மாநிடரின் கொடூரம்
மழையும் வெயிலும் மனிதனுக்கு தேவை
மனத்தூய்மையுடன் வாழ்வது யாருடைய வேலை

இருண்ட உள்ளம் இயற்கையை தாக்கும்
இதனால் பூமியில் கலவரம் வெடிக்கும்
கலியுக காலத்தின் வேகம்-இறைவன்
கபால  கூத்தாடும்போது புரியும்
நகமும் சதையும் போல மானிடா -நிதம்
வாழ்க்கையையும் இயற்கையையும்
வாஞ்சையுடன்  நேசி

காட்டை அழித்து வீட்டை கட்டினான்
கதிரவன் பார்த்து சூட்டை கூட்டினான்
வாழ்க்கையின் தத்துவம் உணராத ஜீவனுக்கு
இயற்கையின் ஆட்டம் இப்போ தெறியும் உனக்கு 

  



 



பேனாவும் கானாவும்

வரலாற்று கதைபல சொல்லி
வாழ்க்கையின் தத்துவம்  எழுத
வந்து பிறந்த வாரிசுகளே நாங்கள்

பாலகனாய் இருந்துபோது-
படங்குனிலே மணல் பரப்பி
''அ''எனும் அமிர்தத்தோடு
அகரத்தை பருக ஆரம்பித்தேன்

அறியா பருவம் என்பதாளே
அழிந்து போகும் தன்மையறியா
அவ்வப்போது சீவி போட்டேன்
அருமையான சென்னிதனை

காலங் கடந்து ஓடி மறைய
பாலங் கூட பற்களிடையே-
பலதிங்கள் வந்து நிதம்
பட்டப்பெயராய் பதிந்ததுவே

கட்டளிந்த பருவம்தனில்
மொட்டவிழ்ந்த பாசம் வந்து
காதல் என்ற நாமம் சொல்லி
கச்சுதமாய் மனதை கிள்ளி
இதய வீட்டுக்குள்ளே புகுந்து
இன்பம் தர தொடங்கியதே

வானலையில்  நான் பேச-
வசிய வார்த்தை அவர் பேச-
கவிநயமோ
உனக்கிருக்கு-நிதம்
கவி இயம்பு என்றான் தோழன்

கண்ணீரை வடித்து வடித்து
கவியெழுத வந்தான் பேனா
கற்பனைகள் பல வடித்து-பட்ட
கஸ்டம்தனை அதில் இடித்து
கசக்கி பிழிய வேண்டுமென்று
காத்திருந்தான் கானா தினம்

சமூக,காதல்,எழுச்சி என
புரட்சி கவி பலபடைக்க
முயற்சி தினம் தான்கொண்டு
பயிற்சி பல தானெடுத்து-நட்பு
பேனா முனைகளோடு நன்றாய்
கலந்தான் கானா நிதம்

அரங்கம் பல தானேறி
கவிசுரங்கம் பல தான்தோன்றி
ஒழிந்திருந்த மாணிக்கம்தனை
உலகம் பார்க்கவைத்தான் கானா

சோதனைகள் முடியவில்லை -
சாதனைகள் புரியவில்லை
வேதனைகள் தீரும் வரை
வீரநடை தொடருவோமே.........  








விமோசனம் எப்போது


வளர்ந்து வளர்ந்து வானுயர
ஆசைதான்-நீயோ
வயிறு பிழைக்க வந்தவனென்று
கழுத்தை வெட்டிவிடுகிறாய்
கவாத்து எனும் வார்த்தை சொல்லி

விதைகளுக்கு கூட விமோசனம்
தருகிறாள் பூமித்தாய்-நிதம்
விருட்சமாய் மேலெழும்பி
விருப்புடன் வாழ்வதற்கு-நீயோ
அடைக்கலம் தந்ததாய் கூறி
அடிமைகளாய் அச்சுபதித்தாய்

வாழ வழி பல இருந்தபோதும்-
தோள்  கொடுக்க யாருமில்லை
தேடி வந்த வேலைதானே
நாடி போக யாரிருக்கா-
எத்தனை ஜென்மம் தேவையடா-எம்
உரிமைதனை வென்றெடுக்க

எத்தனை ரூபா ஈட்டித்தந்தும்
நித்தமும் நாம் நடைப்பிணமாய்
இயற்கைகூட எம்மையறியும்
தாங்கிக் கொள்ளும் தைரியகாரனென்று
சொல்லி சொல்லி பலனுமில்லை-விரல்களுக்கு
கொழுந்தை கிள்ளி கிள்ளி தைரியமுமில்லை

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு-நாம்
வாகை சூடுவது எப்போ கணக்கு?

ஏக்கம்


நீ மட்டும் சந்தோச மழையில் நனைகிறாய்..................
நானோ சலிப்பு வலையில் சிக்கி தவிக்கிறேன்................
எத்தனை இரவில் என் சயனத்தை தடுத்தாய்...........
நிசப்த வேளையில் என் நினைவுகளை களைத்தாய்.............
இது உனக்கே சரியென்று தோன்றுதா................அல்லது 
சமாதானமாக சட்டமன்றம் போவோமா?

இசையின் பாணி

இம்மையில் பிறந்த இளையராஜா...
இனிய கானங்களை தந்த இதயராஜா...
காதலர்கள் மனதில் வாழும் ராஜா....
கதிகலங்க வைக்கும் உங்க பாடல்ராஜா....
பழயவை என்றும் இனியவை ராஜா...
பகலிரவாய் சொல்லுது உங்க பாடல்கள் ராஜா...
பல்லாண்டு வாழனும் நீங்க ராஜா....
பண்போடு வாழ்த்துகின்றேன்....
ஈழத்து கனகராஜா

மாயை காட்டிய பேதை

சின்னஞ்சிறு வயதினிலே
சிக்கனமின்றி விளையாடினாள்
அத்தை மகன் வருவானென்று
அக்கரையாய் காத்திருப்பாள்
தீனிசாமான் தின்று தின்று
திரவியமாய் கதை படிப்பாள்
ஓடியாடி விளையாடி-நிதம்
உள்ளத்திளே குடியிருந்தாள்
பாசம் என்ற சொல்லுக்குள்ளே
பக்தியை நிதம் பதித்துவைத்தாள்
வயது கொஞ்சம் ஏற ஏற
வாட்ட சாட்டம் வாங்கிகொண்டாள்
கலகலப்பாய்  நகர்ந்த வாழ்வு
கட்டளிந்த பருவம் காட்டி
நாணம் வந்து நட்பை தடுத்து-
பீதிப்  புயல் வீசியது
போன மச்சான் திரும்புவதாய்
பொய்யைக்கூட சொல்ல மறுப்பான்
நீலி கண்ணீர் விட்டு நிதம்
நிம்மதியை களைத்திடுவாள்
காதல் எனும் காந்தம் எய்தி
கவர்ந்திளுத்தாள் இரும்புதனை
மாயவலையில் சிக்கி தினம்
பேயவளை காதல் கொண்டேன்
கடிகார முள்ளு ஓடும்போது
கண்ணிமைகள்  மூடும்போதும்
காந்தயலையாய் வந்து தினம்
கனவில் படம் காட்டிடுவாள்
மாலை நேர வேளையிலே
சாலையோர மழைதூரளிலே
ஒற்றைகுடை பிடித்து  சென்று
ஒய்யாரமா காதல் செய்தோம்
ஆசைகாட்டும் தாசியெல்லாம்
அந்தநேரம் மட்டும்தானே
பக்தி கொண்டதேவதையெல்லாம்
காதல் முக்தி பெற்று வாழ்வாதானே!.............