உயிர் தந்த உயிரே


சின்வனாய் நானிருந்தபோதம்மா
சின்னவரு என்று செல்லமாயழைத்த அம்மா
வறுமை வந்து வலைவிரித்தபோது
பொறுமையாக பசி தீர்த்தவளே அம்மா
பயந்து பயந்து ஒதுங்கியோடிய போதெல்லாம்
நயங்து நயந்து துனிவூட்டியவளே அம்மா
பிணி வந்து பிரச்சினை செய்தபோது
தனியா நின்று தாங்கிச் பிடித்தவளே அம்மா
வறுமையின் தன்மையை காட்டி வளர்த்தாளம்மா
வாழ்க்கையின் சுவையை உணர்ந்து கொண்டேனம்மா
பத்து மாதங்கள் சுமந்ததா அம்மா-என்றும்
எனது சொத்தே நீங்கள்தான் அம்மா
நாளும் புத்தியை உறைப்பதிலே அம்மா
தோல் கொடுத்தவளே நீங்கதானம்மா
அன்பை பொழிவதில் நீங்க ஆகாயமம்மா
அடைமழையாய் தினமும் தொடருதம்மா
ஆனந்தகண்ணீரே அடிக்கடி வருகுதம்மா-அதனால்
அணை கட்டி கவிவடிக்கினேனம்மா
பொறுமைக்கு அடையாளமானது பூமியம்மா-அதையும்
அருமையாக மிஞ்சிவிட்டீரே அம்மா
எனது இதயப்துடிப்பே நீங்கதானம்மா
எந்நேரமும் லப்டப் நாதமாய் ஒலிப்பது நீங்கதானம்மா
மங்காத மனது கொண்டதாள் அம்மா
தாத்தா மகிழ்வாய் இட்ட நாமமோ தங்கம்மா
தரணியில் அவதரித்த தங்க அம்மா
தயாள சிந்தையில் வாழனும் நீங்களம்மா
ஆண்டுகள் பல வாழனுமம்மா-அதில்
ஆயுள்வரை என்னை சுமக்க வேண்டுமம்மா
வாழ்க தாயே வளமுடன்
வாழ்த்துகின்றேன் உங்கள் கற்கண்டு

மலையகத்தில் எழ வேண்டும் மகத்தான பல்கலைகழகம்

 அறிவுமிக்க ஆசான்களையும் 

ஆற்றல்மிக்க மாணவர்களையும்

தன்னகத்தே கொண்ட து   தரமிக்க மலையகம் 

மலையக மந்திரிமார்களே

மாற்றான் வீட்டு பிள்ளையாக திகளும்

 மாணவர்களுக்காக உருவாக்குங்கள்-ஒரு

உன்னதமான பல்கலைகழகம் 

எத்தனை வற்சரம் கடந்தும் 

இன்றுவரை எழவில்லை 

தமிழனுக்கென்று பல்கலைகழகம் 

சாதனைமிக்க சகபாடிகள் 

சங்கடத்தை வெளிகாட்டாமல்

ஆகுலத்தோடு அந்நிய 

பல்கலைகழகம் செல்கிறார்கள்

இந்நிலை தீர வேண்டும் 

இன்பமாக கற்க வேண்டும்

 





 


கவிதை பிறந்த காவத்தையூர்






               


காவத்தை எனது  ஊரு
கவனிப்பாரற்று இருக்குது பாரு
பாதையோரம் பலாமரங்களின் வேரு
பசியை தீர்க்க பறந்தோடுது பாரு        
வீதியோரம் வீற்றிருக்கும் வீரகடவுளாரு-நாளும்
வினைகள் தீர்க்க காவல் செய்யுராரு
ஆடிவிழா தொடங்கியதும் ஊரு –பக்த
அடியார்களை வரவேற்கும் பாரு

அழகு தேரு பவனி வரும்போது
ஆலமர வாதுகூட அற்புதமாய் வளையுவாரு
காக்கும் களுங்கடியானின் கருணையாறு
நெடுங்காலமாய் எங்களுக்கு வழங்குவாரு
ஆண்டவன்மீது கொண்ட நம்பிக்கையாறு
ஆயள்வரை  வற்றாத  அழகிய ஆறு
பள்ளிக்கு சென்ற காலத்தோடு
பலாச்சுளையை சுவைக்க தருனமேது
புளோட்டோ சுவையை சுவைத்தவாறு
கலாட்டா எதுவும் இல்லாதவாறு
வீட்டை  வந்து  சேரும்போது

மணிக்கூட்டு முள்ளும் நகர்ந்திருப்பாரு
உடைகளை மாற்றியதோடு
உடனே போவேன் நண்பர்களோடு
உடற்பயிற்சி செய்யும் எண்ணத்தோடு
உளமார விளையாடுவேன் ஊரின் சகாக்களோடு
இனியும் மலருமா இப்படியொரு காலம்
தனியுமா எனது தாயக மோகம்...........



























உண்மையின் விம்பம்

உங்கள் காதல்தான் உண்மையான
காதல் சூரியகாந்தியே!
ஒரு சில காதல் உண்மையானதாய்
காட்சிதரும்-ஆனால்
ஒரு நொடியில் கானல்நீராய்
தோன்றி மறையும்
நீ-காதலன் எனும் பகலவனின்
முகம் பார்த்து மலர ஏங்கும் தருனம்
மற்ற காதலருக்கு நீ சூட்டும்
படிப்பினை எனும் மகுடம்
ஒருவனுக்கு ஒருத்தியென்பது
ஒவ்வொருவரும் கூறும் வசனம்-ஆனால்
நீயும் அருணும் உணர்த்தும் சுபாவம்
அனைத்து காதலுக்கான பாடம்....................

ரோஜாவை தேடும் ராஜா

                         
          
                           ரோஜா இதழே
                                 ரோஜாவை பார்த்து ஏங்குகிறாள்
                                         கவர்ச்சியழகை கண்டு மகிழ்ச்சியா?
                                 இல்லை -கட்டழகை கண்டு அதிர்ச்சியா?
                                       கற்பை சூறையாடும் காடையர்கள்
                                  உலா வரும் இம்மண்ணிலே-இனிமேல்
                                              நீயும் கவர்ச்சியாய் மலரவேண்டாம்-ரோஜாவே
                                 கயவர் கூட்டம் உன்னையும் கற்பழித்துவிடுவான்
                                        என்ற பீதி சாதி சண்டையாய் உருவெடுக்கும்............
                                  என்ற ஆதங்கம் என்னை உருத்துகிறது


  

காதலின் அடையாளம்



தேய்ந்து வளரும் வெண்ணிலாவே
காய்ந்து போவது ஏன் நிலாவே
காதலர் மனதில் நுழைந்த நிலாவே
கதிரவன் ஒளியை கடன் வாங்கிய நிலாவே
வாழ்க்கையின் தத்துவம் சொன்ன நிலாவே
வயதாகியும் வாலிபனான வண்ணநிலாவே
சீதமான வேளைகளில் நிலாவே
ஞாபகமாய் நீ மலர்வாய் நிலாவே
கடனாய் ஒளியை வாங்கியதாளா நிலாவே
காரிருள் நேரத்தில் வருகிறாய் நிலாவே
இரவல் பெற்ற பொருளை நிலாவே
இனி இம்மையில் தருவாயா நிலாவே
உண்மையை சொல்லு நிலாவே-உன்னை
ஒரு நொடியில் முற்றுகையிடுவான் மேகமே

நிலையற்ற வாழ்வின் நிதர்சனம்



அதிகாலையிலே தானெழும்பி
ஆலையை நோக்கி பார்க்கையிலே
பாற்கடலைபோல்  படர்ந்து விரிந்திருந்தது பனிதுளிகள்
பதற்றத்தோடு பதுங்கியிருந்ததை -தான்கண்டு
பாசத்தோடு ஒரு கேள்வி பனிதுளிகளிடம்
ஏன் இத்தனை பீதி கலந்த பதற்றமென்று?
மரணபயம் என்னை மதிகலங்க வைக்கிறது
பகலவன் வரும்வரையே இந்த பரவசம்
பரலோகம் அனுப்புவதே அருணின் நேசமென்றும்........
பறக்கும் ஈசலை போன்றே என்வாழ்வுமென்றது.....
ஆறுதலாக பதிலளித்தேன் அழகிய பனியிடம்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு அதை நீ புரிந்துகொள்
ஆதியிலே கர்ணன் சொன்னார் அடிக்கடி மீட்டிகொள்ளென்றேன்.............
வாழ்க்கையின் தத்துவத்தை இயம்புவதில்
வாஞ்சையடைவதாக கூறி வணங்கி சென்றது-வண்ணபனித்துளிகள்...........................