தன்முனை....

தமிழர்களின் வாழ்வில்
தனித்துவமான தைத் திருநாள்/
புத்தாண்டு தொடங்க
வழியாய் பிறக்கும் நன்நாள்/

ஹைக்கூ

யாரிடம் கற்றுக்கொண்டதோ
சூரியனை கண்டதும் திரும்ப
சூரியகாந்தி பூக்கள்

ஹைக்கூ

பேருந்து பயணம்
பின்னோக்கி சென்று மறையும்
வெளியேறும் புகை

ஹைக்கூ

மூங்கில் காட்டில்
காற்றோடு சேர்ந்து பாடும்
பறக்கும் சருகுகள்

தன்முனை

மக்களின் வரிப் பணத்தில்
மாநாடு நடுத்துகின்றனர்//
ஏமாந்த மானிட கூட்டம்
இறுதியில் தோல்வியை சந்திக்கின்றனர்//

நேர்காணல் ஆதவன் டிவி

https://youtu.be/2cdtP37bl5o?si=Yh3xpOsTeLh7J3rB

ஹைக்கூ

வீதியின் ஓரத்தில்/
யாருடைய வருகைக்காக
காத்திருக்கிறதோ/
குப்பையுடன் நெகிழிப்பைகள்/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

On the road side/
Waiting for whose arrival/
Polythene cover along with garbage

Dr.Sivagamasundari Nagamani
Chennai

ஹைக்கூ

வெட்டிய மரத்தில்/
மீண்டும் துளிர் விடுமோ/
குருவிகளின் தாய்மை/



ஹைக்கூ

தேர்த் திருவிழா/
பின் தொடர்ந்தே வருகிறது/
அரோகரா கோசம்/






தன்முனை

பண்டிகை என்றாலே
பாரம்பரியம் எங்கும் முழங்கும்/
உறவுகள் ஒன்று கூடிட
மகிழ்ச்சியில் திளைத்து குலுங்கும்/



ஹைக்கூ

துளிர்விட்ட கிளையில்/
புத்தம் புதிதாய் முளைக்கும்/
பறவைகளின் காதல்/

அந்தாதி

துள்ளி விளையாடும் செல்ல தேவதையே/
தேவதையே குடும்ப
சீதேவி மொட்டே/
மொட்டே மலர்வாய்
முழுநிலவு ஒளியே/
ஒளியே கற்பின்
உண்மை அணிச்சையே/
அணிச்சையே வாடா
அழகு செல்லமே/
செல்லமே சீதனக்
கல்வி மழையே/
மழையே பொழிந்து
மகிழ்வே தருமே/
தருமே நிதமே
தங்கமாய் மிளிருமே/

லிமரைக்கூ

பாலைவனத்தில் மணல் பரப்பு/
நவீன உலகில் அரேபிய மன்னர்கள்/
கட்டிடம் கட்டியதால் மதிப்பு



தன்முனை


மௌனம் ஆழமான 
சிந்தனையின் தோற்றமாகும்/
அமைதியாக கடந்து செல்ல
வெற்றிக்கான தனித்துவ மாற்றமாகும்/

லிமரைக்கூ


அன்னை

அன்னையின் கற்பித்தலில்
அகிலத்தை வென்றிடுவோமே
****************************************
அன்பை பாலாக்கி அகரத்தை ஊட்டியவளே//
ஆசானை தான்மாறி ஆற்றுப்படுத்திய மாதாவே//
தமிழ்ப்பாட புத்தகத்தை மனப்பாடம் செய்யச்சொல்லி//
மாலைப்பொழுது ஆனதுமே தடியோடு நின்றவளே//
கண்டிப்போடு கற்பித்து கல்வியிலே உயர்த்தினாயே//
நீ சொல்லித் தந்த சொற்களெல்லாம்//
சுருக்குப்பை சல்லி சத்தமாகி//
இப்போதும் மனதினிலே இனிப்பாக கேட்கிறதே//
முத்தமிழின் சுவாசத்தை முதன்முதலாய் கருவறையில் //
தாய்மொழியின் உன்னதத்தை தனயனுக்கு அளித்தாயே//
அம்மா உந்தன் கலை அகத்தாலே//
அகிலம் போற்றும் மானுடன் ஆனேன்//



தன்முனை -அன்பு

தூய அன்பினால்/
வாழ்வோ செழிப்பாகும்/
போலி பாசத்தால்/
பிரிவோ குடிகொள்ளும்/

ஹைக்கூ

நெடுஞ்சாலை/
உயிருக்கு போராடி மடியும்/
மீன்கொத்தி வாயில் நாக்கட்டான்பூச்சி/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

on highway in kingfisher's beak
dies struggling for life
earthworm.