ஹைக்கூ

வீதியில் ஏழைத்தாய்
மீண்டும் எப்போது மலருமோ
தடம் புரண்ட வாழ்க்கை


அந்தாதி

தொலைக்காட்சி
********************
தொலைக்காட்சி தூரத்து நிகழ்வை காட்டும்/
காட்டும் இன்ப துன்ப காட்சிகள்/
காட்சிகள் கண்களுக்கு விருந்தாக மாறும்/
மாறும் மனதில் மகிழ்ச்சி தொடரும்/
தொடரும் நாடகத்தால் குடும்பத்தில் குழப்பம்/
குழப்பம் நீங்க எழுச்சியே தொலைக்காட்சி/



ஹைக்கூ


சில்லரை வியாபாரி/
புதிதாய் வந்து போகும்/
வான்மழை/

தன்முனை

எண்ணத்தின் உணர்வுகளை
எழுத்துகளாய் வெளிப்படுத்தும்/
சூழலின் பிரதிபலிப்பால்
ரசிகனையும் ஈர்த்து நிற்கும்/



ஹைக்கூ

புராதன வாழ்க்கை/
புதிதாய் முளைக்கிறது/
கணினியுகம்/



ஹைக்கூ

எப்போது பிறந்தாலும்
வானத்தை பார்த்தே வாழும்
வௌவால்

கவிஞர். பழனியாண்டி கனகராஜா

Whenever it is born/
Lives by looking at the sky/
The bat

Translated by
Dr.Sivagamasundari Nagamani
Chennai

அந்தாதி

மூவேந்தர்

மூவேந்தர் சிறப்புதனை முத்தமிழ் சொல்லும்/
சொல்லும் செயலும் சூசகம் உணர்த்தும்/
உணர்த்தும் உணர்வில் உலகம் போற்றும்/
போற்றும் மாந்தர் பூரிப்பில் திகழ்வர்/
திகழ்வதை கண்டு தனமும் குவியும்/
குவியும் வாழ்த்தால் குதூகலமாய் மூவேந்தர்/