கொழுந்தெடுக்கும் கோதையரே


கொடுத்தெடுக்கும் கோதையரே

கொங்காணியிலே என்ன இருக்கு
அந்த கால கனவெல்லாம் கணக்கு
அருகம்புல்லா தூங்கிக்கிடக்கு

சாதனைகள் பல செய்து
சாதிக்க மனசு துடிக்கையில
கூலிகாக்கார கூட்டமென்று
கொடுமை செய்ய பார்க்குறீயே

பீதியென்பது எங்களுக்கில்ல
பிரம்மனிடமோ நீயும் கேட்டதில்ல
ஊக்கத்தோடு வென்றெடுக்கும்
உழைப்பாளி சிங்கங்கள்டா நாங்க

பாம்பும் சிறுத்தையும் கூடவே வந்து
பாட்டாளி வர்க்கமுனு அழிக்க பார்க்கும்
பயந்து நாங்க ஓட மாட்டோம்
நாடே உயர நாங்க உழைப்போம்

நீயும் நானும் ஒன்னா சேர்ந்து
நிம்மதிக்காய் சுதந்திரம் கண்டோம்
தனக்கு மட்டும் உரியதென்று
தம்பட்டமடிக்கும் சாதியடா நீ

உலக நாட்டு வரிசையிலே
ஒன்றாம் இடத்தில எங்க உழைப்பு
உழைப்பெல்லாம் சுரண்டிகிட்டு
ஊதாரியாக்குவதே உங்க நெனப்பு

இனியும் பொறும எங்களுக்கில்ல
துளியும் கூட அஞ்சுவதில்ல
கழனியில விளையும் நெல்லுபோல
கல்வியில உயர்ந்து காட்டுறோம் பாரு

எரிந்தது நூலகமா? இல்லை தாயகம்!


அன்பும் அறிவும் இரண்டறக் கலந்து/
அன்றையத் தமிழனின் மனதினில் பதிந்து/
உருவாகிய அழகிய அறிவுக் கோட்டை/
எருவாகிப் போனதால் வீழ்ந்ததே வேட்கை/


பனுவல்கள் நாளும் பற்பல சேமித்து/
பாசத்துடன் அனைவரையும் ஒன்றாய் கோர்த்து/
தமிழனின் வரலாற்றை தரணியில் நிலைநாட்ட/
தாற்பரியமாய் எழுந்த தங்க மாளிகையிது/

கண்கள் இரண்டும் குருடாகிப் போனால்/
காட்சிகளை காண முடியுமா எமக்கு/
அறிவுக்கண்னை தீயிட்டு அழிக்க நினைத்தால்/
ஞானக்கண் மீண்டெழுமே தெரியாத உனக்கு/

வீரத்தமிழனின் பான்மையை விளங்காத மானிடா/
தீரயோசித்து தீர்மானிக்காத கயவனடா நீ/
புத்தங்கங்களைத் தானெரித்து பித்தனே மகிழ்ந்தாயடா/
மொத்தமான தாயகத்தின் சித்தமெல்லாம் கலங்குதடா/

நாமெல்லாம் தாயகத்தில் ஒரு இனமடா/
நமக்கென்று ஒரு குணமுண்டு புரியாதா/
அரக்ககுணத்தை நீ எரித்துப் போட்டு/
அறிவுக் கண்ணை திறக்க விடு/

வாசகசாலையில் பிறந்த வண்ணச் சிசுக்களை/
வஞ்சக எண்ணத்தால் நசுக்கினாயே பாவி/
தழிழனின் தார்மீக சொத்துடா அது/
தரணியெங்கும் பறைசாற்றும் தமுக்கமடா இது/

நாம் வாழ்ந்த வரலாறுதான் நூலகம்/
நாசமாகிப் போனதே எங்கள் தாயகம்/
எதிர்காலம் நாளை தமிழின் வாசகம்/
இடிக்க முடியாத அழகிய கோபுரம்/

வருங்கால ஆட்சியினை வசமாக்குவான் தமிழனென்று/
ராத்திரி வேளையிலே ரணகளமாகியது தாயகமே/

இதயம் துடிக்காதோ

இதயம் துடிக்காதோ
என்னவளை நினைக்காதோ
நேசமென்றும் கசக்காதோ
நெஞ்சினிலே சுமக்காதோ
பக்தியும் பிறக்காதோ
முக்தியும் கிடைக்காதோ
காதலை மறுக்காதோ
காலகாலமாய் இனிக்காதோ

#தண்ணீரெனும் #தீர்த்தம்இயற்கை அன்னையின் உடையே
எமக்கு கிடைத்த கொடையே
மண்ணைக் காக்கும் மரமே
மழையை தந்த குணமே

ஊருக்கெல்லாம் உதவிடும் நீயே
ஓய்வில்லாது போராடும் நீரே
தனத்தை கொடுப்பது தர்மமே
தான்தோன்றியாய் வீணடிப்பது பாவமே
ஓடும் நீருக்கோ ஒற்றுமையுண்டு
ஒருநாள் கடலில் சேர்வதுமுண்டு
கிடைத்த பொக்கிசத்தை கிழிந்தெரிந்து
பீலி சண்டைகளோ நாளும் மூண்டு
காவல் பணிமனை முன்னே இன்று
கைக்கட்டி நிற்பது ஏனடா மனிதா
தண்ணீர் பஞ்சம் வரும்போது-நீயோ
தவமிருப்பாய் பீலிகரையில் நின்று
எப்போ தண்ணீர் வருமோவென்று
ஏக்கத்துடன் கலங்குவாய் நின்று
வெறுமனே குழாய்களை திறந்து சென்று
வெட்டிக் கதைகள் பேசினாய் அன்று
சிந்திய துளிகளையெல்லாம் தினமளந்து
திருப்பி தருவாயா நீயே இன்று
கடவுளுக்கே வந்த கோபமென்ன
கலங்க வைத்த சாபமென்ன
இத்தனைக்கும் இனிய பதில்
இறைவன் நம்மை சபித்ததாலே

நினைவே சங்கீதம்


நினைவே சங்கீதம்
நீந்துதே மனதில் எந்நாளும்
கானங்களும் ஒலிக்கிறதே
காதலின் நினைவுகளும் பிறக்கிறதே

உண்மைக் காதலின் உத்தரவாதம்
ஊன்றிப் பார்த்தால் கானம் பாடும்
அலைகளின் ஓசையோ அடையாளம்
அன்பிலே மலர்ந்த கீதாசாரம்
நினைவுகளை நீந்தவிட்டு
நெடுநேரம் காத்திருந்தேன்
வெற்றிவாகை சூடிக் கொண்டு
நெற்றில் திலகம் இட்டதிங்கே
அன்பு என்ற வார்த்தையெல்லாம்
அவ்வப்போது மலரும் கானலல்ல
ஆயுள்வரை நிழலைத் தந்து
ஆதரிக்கும் அசையா ஆலமரமே
உன்னை நினைத்து மூச்சிவிடும்
உயிர்க்காதல் சங்கீதமாய்
உலகம் அழியும் காலத்திலே
தடம் பதிக்கும் சாதனை நினைவே
இசையால் வசையாகா இதயந்தனிலே
இனிமை சேர்க்கும் உன் நினைவே
ஒவ்வொரு நொடியும் நினைத்து நினைத்து
உள்ளத்தில் பதிந்த ரீங்காரமே

தொடு வானம் தூரமில்லை


இலக்கு என்ற விளக்கு
ஏற்றினால் எங்கும் சிறப்பு
இருளை நீக்க எத்தனையோ ஒளியிருக்கு
இமயம்தனை தொட்டிட பாதையை வெட்டு

முயற்சி எனும் பயிற்சி எடுத்து
முன்னேற்ற கோணத்தில் வாழ்வை நகர்த்து
சாதனை புரிந்த சாம்பவான்களெல்லாம்
சோதனைகளை தாங்கி வந்தவர்கள்தான்
கவியென்ற விதை முளைப்பதற்கு
கணநாட்கள் சென்றதுதான்
கரிசனையோடு கிறுக்கியதால்
பரிசுகளையெல்லாம் வாரி தந்ததுவே
விருதுகளை பெற்றிடவே
விடாமுயற்சியை விடவில்லை
தன்னம்பிக்கையும் வளர்ந்து வளர்ந்து
தானாய் சிகரம் தொட்டதிங்கே
குறிக்கோள் என்ற இமயமலையை
கூடிய சிக்கிரம் அடைந்திடவே
தைரியமென்ற ஏணியை எடுத்து
தடம் பதித்த சிங்கக்குட்டியடா

#அந்தகால #சித்திரயே #வா #வா


சித்திரையும் வந்துரிச்சி
நித்திரையும் கலஞ்சிரிச்சி
அந்த கால வாழ்க்கையெல்லாம்
அப்படியே மனசுல ஒட்டிக்கிச்சி

கல்விய புகட்டுனுமுனு -அப்பா
கடையில வச்ச நகைகளெல்லாம்
அடகுல மூழ்கி போக முன்னே
ஆதாய காசுல மீட்டுனாரே
பட்டாசு கொளுத்த கூடாது மகேன்
சுட்டா கையில புன்னாகிடுமுனு
பக்குவமா அம்மா சொன்னதுமே
மத்தாப்பும் சுத்தி மகிழ்ந்தேனே
மகிழ்ச்சியா நானும் இருந்தேனே
பணிய கானுலபோய் குளிச்சிட்டு
படபடனு வந்தேனே வீட்டுக்கு
பலகார வடையெல்லாம் எடுத்துவந்து
பத்திரமா அப்பாட்ட நானுங்கொடுக்க
மொறப்படி வாழையிலயில படையலிட்டு
மூத்த குலதெய்வத்த வணங்கினோமோ
முந்தி விநாகனை நாங்க நெனைத்து
முதல் தேவாரத்தை அம்மா தொடங்க
பள்ளியில படிச்ச தேவரத்தயெல்லாம்
பக்தியோட படிச்சோம் மூவருமே
அக்கம்பக்கம் சொந்தங்களுக்கென்று
அக்காவும் நானும் பொதி செய்து
ஆசையுடன் கொண்டு சேர்த்த
அந்தநாட்களெல்லாம் மீண்டும் வருமா
ஒன்றுமறியா பருவமது
உள்ளத்துலே இல்ல சூதுவாது
நல்லதே படிச்சி வாழ்ந்ததாலே
நானும் கவியில சொல்லலானேன்
வா வா எமது சித்திரயே
வாழ வழி காட்டிடுங்க புத்தரே
சந்தோசமா வீசுங் காற்றலையே
சமாதான வாசம் வீசிடுவே
நேரம் காலை 8.09