வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும்



குழந்தையாய் இருந்தபோது

கும்மாளம் போட்டத் தளிரே
சிம்மாளம் புகுந்து நித்தம்
சீதேவியை வரவேற்றதுவே
(10)
பேதைமை தெரியா அகவையது
பெற்றோர் சுமந்த பிள்ளையிது
காலங்கள் ஓடி மறைந்துமே
கணப்பொழுதில் கட்டிளம்
அடையாளங் காட்டியதே
(13)
புத்தம் புதிய பூவே
சித்தமெல்லாம் கிலியே
பித்தம் அதிகம் சிரசிலேறி
நித்தம் நிம்மதியை குழப்பியதே
சுற்றம் கூடி வரும்போது
சொக்கத் தங்கம் முற்றம் நாடி
அன்பெனும் மலரைத் தூவி
அன்று அகமகிழ்ந்து வரவேற்றதுவே
(24)
நாணம் வந்து நயனம் பாட
நங்கையவள் மனதில்
வெட்கமும் கூட
கார்குழலில் கண்ணை மறைத்து
ஓரவிழியில் உருவம் பார்க்கும்
ஒற்றை ரோஜா இவள்தானோ
(17)
மொட்டு விட்ட முழுமலர் நீ
மொய்க்கும் வண்டு நெருங்கும் இனி
வெட்கம் உன்னிடம் விருந்து வைத்தால்
விருந்தாளி வந்து சுவைப்பான் கண்ணே
(16)

0 comments:

Post a Comment