தந்தை போலாகுமா



அன்னை பிறந்த ஊரை நோக்கி

அப்பாவும் நானும் அழகாய் உடுத்தி
வீதியோரம் வந்து நின்றபோது
வேகமாய் வண்டியும் சென்றிடவே

கால்கடுக்க காத்திருக்க
காரிருளும் பகலை மறைக்க
என்ன செய்வோம் மகனென்று
ஏக்கத்துடன் கேட்டார் அப்பா

தாத்தா ஆச்சி பார்க்க வேணும்-
பிடிவாதம் பிடித்து நின்றேன் நானே
நடந்து போவோம் வா மகனே
தைரிய வார்த்தை மொழிந்தார் சிவனே

நான்கு மைல் சென்றதுமே
நானோ சோர்வில் துவண்டதுமே
காவல்நிலைய வாகணமொன்று
எங்களை கண்டு நின்றதன்று

எங்கே போகிறீர் என்று கேட்க
இன்னதென்று தந்தை இயம்ப
ஏற்றி இறக்கி சென்றார் -அந்த
இரக்கமுள்ள மனிதனன்று

செல்ல கதைகள் கதைத்து கொண்டு
சீக்கிரமாய் சென்றடைந்தோம் வீடு
தனயனது சுவையை உணர்ந்த -என்
தந்தை போலாகுமா இவ்வுலகில்-
ஆயுள்வரை நான் மறவேன் அறிவுக்கடல் நீங்கள் தானே

0 comments:

Post a Comment