வாழ்க்கையும் இயற்கையும்





அன்னையின் கர்ப்பபையிலே
சிக்கிய சிறுதுளி சுக்கிலம்
சிறு பிண்டமாய் உருவாகியதே
மூச்சி எனும் ஆதாரம் கொண்டு
சுவாசம் எனும் காற்றுபுகுந்து
துடிக்க ஆரம்பித்த சுவர்க்க
மண்டலமது

பல திங்கள் தான் கடந்து
பதினெட்டு பாடுகளை
அன்னைக்கு தந்து
பாரினிலே உதித்த பிஞ்சி
பாசத்தோடு அரவனைத்த குஞ்சி

பூமிதாய் தாங்கிக் கொண்டாள்
பொறுமைதனை தேங்கி கொண்டாள்
இயற்கையன்னை மகிழ்ச்சி கொண்டு
இன்முகத்துடன் வாரி கொண்டாள்

இன்பமும் துன்பமும் இறைவனின் நியதி
இரவும் பகலும் இயற்கையின் பரிதி
சீற்றம் கொள்வது இயற்கையின் சுபாவம்
சீண்ட வைப்பது மாநிடரின் கொடூரம்
மழையும் வெயிலும் மனிதனுக்கு தேவை
மனத்தூய்மையுடன் வாழ்வது யாருடைய வேலை

இருண்ட உள்ளம் இயற்கையை தாக்கும்
இதனால் பூமியில் கலவரம் வெடிக்கும்
கலியுக காலத்தின் வேகம்-இறைவன்
கபால  கூத்தாடும்போது புரியும்
நகமும் சதையும் போல மானிடா -நிதம்
வாழ்க்கையையும் இயற்கையையும்
வாஞ்சையுடன்  நேசி

காட்டை அழித்து வீட்டை கட்டினான்
கதிரவன் பார்த்து சூட்டை கூட்டினான்
வாழ்க்கையின் தத்துவம் உணராத ஜீவனுக்கு
இயற்கையின் ஆட்டம் இப்போ தெறியும் உனக்கு