நிலையற்ற வாழ்வின் நிதர்சனம்



அதிகாலையிலே தானெழும்பி
ஆலையை நோக்கி பார்க்கையிலே
பாற்கடலைபோல்  படர்ந்து விரிந்திருந்தது பனிதுளிகள்
பதற்றத்தோடு பதுங்கியிருந்ததை -தான்கண்டு
பாசத்தோடு ஒரு கேள்வி பனிதுளிகளிடம்
ஏன் இத்தனை பீதி கலந்த பதற்றமென்று?
மரணபயம் என்னை மதிகலங்க வைக்கிறது
பகலவன் வரும்வரையே இந்த பரவசம்
பரலோகம் அனுப்புவதே அருணின் நேசமென்றும்........
பறக்கும் ஈசலை போன்றே என்வாழ்வுமென்றது.....
ஆறுதலாக பதிலளித்தேன் அழகிய பனியிடம்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு அதை நீ புரிந்துகொள்
ஆதியிலே கர்ணன் சொன்னார் அடிக்கடி மீட்டிகொள்ளென்றேன்.............
வாழ்க்கையின் தத்துவத்தை இயம்புவதில்
வாஞ்சையடைவதாக கூறி வணங்கி சென்றது-வண்ணபனித்துளிகள்...........................