தேயிலை செடியின் கீழே

தேயிலை செடியின் கீழே
தேங்காயும் மாசியும் 
திரண்டு வழியுதென்று
தேனான மொழி மலர்ந்து
திறமையாக தான் கதைத்து
திட்டமிட்டு அழைத்தானடி
திருட்டு கூட்ட மானிடனிங்கே
பஞ்சம் தலைவிரிக்க 
பாரதத்தை பாவி மிதிக்க
பசப்பு மொழிக்கு தான்மயங்கி
கசப்பு வழி கயவரென்று 
கண்கூடாய் காண தவறிவிட்டு
தஞ்சம் என தானினைத்து
தாய்நாட்டை தான்விட்டு
தாயகம் தேடி வந்தானடி
தல்லாடி மனம் நொந்தானடி-இதில்
தரங்கெட்டு போனானடி
அந்நியனின் ஆதிக்கத்தில்
அடிமைப்பட்டு வாழ்ந்தானடி

தென்னை மர உச்சியினிலே 
திரவியமாய் தொங்கும் தேங்காய்
கடல்தனிலே வசிக்கும் இனம்
கறுப்பு மாசி என்று மனம்
கருத்தாய் யோசிக்க மறுத்ததேனோ?
ஏமாற்று கூட்டமென்று 
இழிவாய் கதை வளர்த்து
இம்சை தர தொடங்கினானடி
நம் வம்சதனை தானழிக்க
வாய்ப்பை சிறப்பாய் கொண்டானடி

காடுகளை தானழித்து 
கச்சுதமாய் மலையமைத்து
உச்சிவரை தான் சென்று
உதிரத்தை உரமாய் தந்து
ஒவ்வொரு நாளும் மனம் நொந்து
உடுக்க உடை இழந்து 
படுக்க பாயில்லாமல்
நடக்க காலில்லாமல்
கந்தைதனை தானனிந்து
விந்தை பல தான் கண்டு
மந்தை கூட்டம் போல
மலைகளில் தானடந்து
வனம் என்று சொன்ன மனம்
பணம் என்றும் தந்த இடம்
பணத்தை மட்டும் பார்த்த இனம் 
நம்-இனத்தை மட்டும் வெறுத்த குணம்
இரு
னூறு ஆண்டு கடந்தும் 
எப்போ வரும் இன்பமென்று 
ஏங்கி தவிக்கும் இளைஞர்  குழாம் 
ஒளி எப்போ பிறக்குமென்று 
விழி திறந்து பறக்கும் வண்டு................